🔴கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தி ! || CHRISTMAS SPECIAL MESSAGE

🔴கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தி ! || CHRISTMAS SPECIAL MESSAGE

🔴கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தி ! || CHRISTMAS SPECIAL MESSAGE 




என்ன என்னை வந்து கிறிஸ்மஸ் ஆராதனைக்கு ஒதுக்கி வச்சிருப்பாங்க பொதுவா ஏன்னா நான் கிறிஸ்மஸ் பத்தி என்ன பேசுவேன்னு நிறைய பேருக்கு தெரியும் இன்னைக்கு காலையில என்னுடைய பகை கேட்டாங்க என்னை பார்த்து உங்களை யார் கூப்பிட்டா கிறிஸ்மஸ் அன்னைக்குன்னு அதான் சொன்னேன் என்னையும் கூப்பிட்டு இருக்காங்க அப்படின்னு சொல்லி சோ உங்களை எல்லாம் சந்திப்பதில் உண்மையிலேயே ரொம்ப சந்தோஷம் விழிச்சிருக்கிறீர்களா சந்தோஷமா இருக்கிறீங்களான்னு அவர் கேட்டாரு அது யூஸ்வலா இருப்பீங்க யாராவது விழிச்சிருக்கிறீங்களா தூக்கம் ஒன்னும் இல்லையே எத்தனை பேர் டீ குடிச்சிட்டு

 வந்தீங்க டீயை குடிக்கலையா கொஞ்சம் கஷ்டம்தான் நான் ஒன்னா தெரியுறேனா ரெண்டா தெரியுறேனா ஒன்னா தான் தெரியுறேனா சரி ரைட் ஓகே ஏன்னா செய்தி கொடுக்கிறதுக்கு சில நேரம் வந்து மோசமான நேரம் மதியானம் சாப்பிட்ட பிறகு செய்தி கொடுக்க சொல்லுவாங்க அதைவிட மோசமான நேரம் உலகத்திலேயே ஒன்னும் கிடையாது அதே மாதிரி ஆல் நைட் பிரேயர்ல நைட் ரெண்டு மணிக்கு செய்தி கொடுக்க சொல்லுவாங்க அதுவும் யாரும் கேட்க மாட்டாங்க இப்பதான் முதல் முதலா காலையில நாலரை மணி அஞ்சு மணிக்கு செய்தி கொடுக்கிறோம் நான் பேசுறது எல்லாம் தெளிவா கேட்குதா நீங்க எப்படி கேக்குதோ அதை

வச்சுத்தான் நானும் முழிச்சிருக்க முடியும் ஆனா உங்கள எல்லாம் பார்த்தா கொஞ்சம் உற்சாகமாதான் கிளம்பி வந்திருக்கிறீங்க நீங்க கிளம்புறதுக்கே ரெண்டு மணி நேரம் ஆயிருக்க முடியலையே காலையில அல்லேலூயா ஏன்னா நீங்க வந்திருக்கிறதை பார்த்தா எப்படியும் ஒரு மூணு மூணு மணிக்கு எல்லாம் கிளம்ப ஆரம்பிச்சாதான் நீங்க இந்த ரேஞ்சுக்கு வந்து உட்கார்ந்து இருக்க முடியும் பரவால்ல ஸ்தோத்திரம் ப்ரைஸ் தி லார்ட் கர்த்தருடைய வார்த்தைக்கு நேராய் நாம் கடந்து போவோம் ஒரு வசனத்தை வாசிக்கலாம் மத்தேயு எழுதின சுவிசேஷம் இரண்டாம் அதிகாரம் 11வது வசனத்தை வாசிக்கலாம் மத்தேயு எழுதின

சுவிசேஷம் இரண்டாம் அதிகாரம் 11வது வசனம் அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்து கொண்டு தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும் தூபவ வர்க்கத்தையும் வெள்ளைப் பூலத்தையும் அதற்கு காணிக்கையாக வைத்தார்கள் கண்களை மூடுவோம் நல்ல தகப்பனே எங்கள் சர்வ வல்லமையுள்ள ஆண்டவரே இந்த அருமையான நேரத்திற்காய் உமக்கு ஸ்தோத்திரம் கிருபையுள்ள கரத்தில் எங்களை தாழ்த்துகிறோம் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு கொடுக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஆண்டவரே நீர் எங்களுக்கு

 ஏற்படுத்திக் கொடுக்கிறது அப்பா உம்முடைய சமூகத்தில் உட்கார்ந்திருப்பது எத்தனை சந்தோஷம் அதிகாலையில் என்னை தேடுகிறவன் என்னை கண்டடைகிறான் என்று வேதத்திலே வாசிக்கிறோமே காலைதோறும் உம்முடைய கிருபை புதிதாய் இருக்கிறது என்று சொல்லி நாங்கள் பார்க்கிறோமே தேவனாகிய கர்த்தர் இந்த காலை வேளையிலே புதிய கிருபையினால் உம்முடைய வசனத்தினால் எங்களை நிரப்பும்படி நாங்கள் ஜெபிக்கிறோம் ஆண்டவரே உம்முடைய மகிமை மூடிக்கொள்ளட்டும் எங்கள் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் பிதாவே அல்லேலூயா நல்லா உற்சாகமா சொல்லுங்களேன் அல்லேலூயா அல்லேலூயா இன்னொரு எனக்கு ஒரு

 50 நிமிஷம் இருக்கு அதுவரைக்கும் நீங்க இதே உற்சாகத்தில் இருந்தீங்கன்னா ரொம்ப சந்தோஷமாக இருக்கும் மத்தேயு எழுதின சுவிசேஷம் இரண்டாம் அதிகாரம் 11வது வசனம் உங்க எல்லாருக்கும் தெரிந்ததுதான் இந்த வான சாஸ்திரிகளை குறித்து நாம் பார்க்கிறோம் இந்த இது வந்து இந்த காலகட்டத்தில் நீங்கள் சில விஷயங்கள் வந்து வேதத்தில் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது நாம அதை கொஞ்சம் தப்பா புரிஞ்சுக்கொள்கிறோம் அவ்வளவுதான் அல்லது என்னன்னா நாம ட்ரெடிஷனா சில காரியங்களை கேட்டுக்கிட்டு இருக்கிறோம் இருக்கிறோம் அதுவே நமக்கு பழக்கப்பட்டதுனால சின்ன வயசுல இருந்து

 பழக்கப்பட்டதுனால நாம அதை என்ன செய்றோம்னா படிக்கும்போது கூட நாம கேட்டது மனசுல இருக்கிறதுனால படிக்கும்போது அதுல உள்ள சின்ன சின்ன விஷயங்கள் நமக்கு ஞாபகத்தில் இருக்காது உதாரணமா இந்த சம்பவத்தை எடுத்துக்கோங்க நீங்க டிராமா எல்லாம் போடுவீங்க டிராமா போடும்போது பார்த்தீங்கன்னா மூணு பேர் வருவாங்க மூணு பேர் வந்து அந்த டிராமால குழந்தைக்கு முன்னாடி மூணு காரியத்தை வைப்பாங்க நீங்க பார்த்திருப்பீங்க ஏன் மூணு பேர் வராங்க அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா வானசாஸ்திரிகள் மூணு பேர் வந்தாங்க அப்படின்றதுக்கு அடையாளம் என்னன்னா இந்த

 மூணு பொருள் இங்க இருக்குது பார்த்தீங்களா பொன்னையும் தூபவ வர்க்கத்தையும் வெள்ளை போலத்தையும் வைத்தார்கள் அதனால நம்ம என்ன பண்றோம்னா மூணு வான சாஸ்திரிகளை பொதுவா நம்ம வந்து அப்படி வைப்போம் ஆனால் உண்மையிலேயே சரித்திரத்தில் பார்த்தீங்கன்னா இயேசுவை பார்ப்பதற்கு ஏறக்குறைய 2000 வானசாஸ்திரிகள் வந்திருக்கிறார்கள் 2000-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருக்கிறார்கள் அவங்க எங்கிருந்து வந்தாங்கன்னு பார்த்தீங்கன்னா கிழக்கிலிருந்து வந்தார்கள்னு இருக்கு கிழக்குங்கிறதுனா அன்னைக்கு ரேஞ்சுக்கு கிழக்குங்கிறது நம்ம ஈரான் நம்மளை குறிக்கிற நாடு ஈரான்லிருந்து இந்தியா

 வரைக்கும் கிழக்கு பக்கம்தான் இருக்கு சோ இங்கிருந்து புறப்பட்டு போனவர்கள் இவர்கள் யாரும் இஸ்ரவேலர்கள் அல்ல இவர்கள் யாரும் இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்களும் அல்ல அவர்கள் எல்லோரும் புதிதாக இயேசுவை அப்பதான் பார்க்கிறாங்க அப்பதான் பார்க்க போறாங்க போகும்பொழுது அவர்கள் கொண்டு போன பொருள் ரொம்ப முக்கியம் சரித்திரத்தில் என்ன சொல்லுவாங்கன்னா இந்த ஆராய்ச்சி பண்ணும் பொழுது இந்த மூணு மூணு இடத்தில் கிடைக்கும் அதிகமாக கிடைக்கக்கூடிய ஒரு நாடு வந்து இந்தியா வெள்ளைப்பழம் கிடைக்கக்கூடியது மத்திய கிழக்கு நாடுகள் தூபவர்க்கம் கிடைக்கக்கூடியது வந்து

 அரேபிய நாடுகள் இப்படி நிறைய சொல்லுவாங்க சோ இதெல்லாம் எடுத்துக்கிட்டு தான் அவங்க வந்தாங்க அப்படின்னு சொல்லி அந்தந்த நாட்டுல அது கிடைச்சுச்சு அப்படிம்பாங்க ஒரு விஷயத்தை மட்டும் எப்பவுமே நீங்க மனசுல வச்சுக்கணும் இந்த வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது வெறும் சரித்திரமாய் இருக்குமானால் வெறும் ஒரு இன்பர்மேஷனா இருக்குமானால் அது வெறும் புத்தகம் அவ்வளவுதான் அதுக்கு பின்னாடி தேவனுடைய ரகசியம்னு ஒன்னு இருக்கு அதனாலதான் அதுக்கு பேரு பரிசுத்த வேதாகமம் உலகத்தில் இருக்கிற எல்லா புக்லையும் இன்பர்மேஷன் இருக்குது அது அங்கங்க கிடைக்கும் அங்கங்க வந்தாங்க யார் எந்த

 நாட்டுல ராஜா இருந்தாரு எல்லாம் இருக்கு அதெல்லாம் புக்ஸ் இது மட்டும்தான் ஹோலி புக் ஹோலி பைபிள் அப்படின்னு சொல்றோம் காரணம் என்னன்னா இதுக்கு பின்னாடி தேவனுடைய திட்டம் இருக்கு ஒவ்வொன்னத்துக்கு பின்னாடியும் கர்த்தர் அதுக்கு உண்டான ஒரு பரலோகத்தின் ரகசியத்தை வச்சிருக்கிறார் குறிப்பாக நம்ம இந்த மூணு பேரும் எடுத்துக்க வேண்டாம் மனசுல எடுத்துருங்க மூணு பேர்னு எடுத்துருங்க ஏன்னா மூணு பேர் என்பது இல்லை அங்க மூணு பேருன்னு சொல்லவும் இல்லை மூணு பொருள் வர்றதுனால மூணு பேர் நம்ம நினைச்சுக்கிட்டோம் இப்ப நீங்களே பாருங்களேன் ஒரு வீட்டுக்கு

 போகும்போது காரம் வாங்கிட்டு போவீங்க ஸ்வீட் வாங்கிட்டு போவீங்க பழம் வாங்கிட்டு போவீங்க மூணு பொருள் வாங்கிட்டு போனா மூணு பேர் போறோம்னு அர்த்தம் இல்ல ஒரு ஆளே மூணையும் வாங்கிட்டு போலாம் இல்லனா இன்னும் கொஞ்ச பேர் நம்மகிட்ட ஒரு பழக்கம் இருக்கு பத்து பேர் போய் ஒரு பொருள் எடுத்துட்டு போவோம் அந்த பாவம் வீட்டுக்காரன் ரொம்ப நம்மள நம்பி பார்ப்பான் நம்ம ஒரு அரை கிலோ ஸ்வீட்டை வாங்கிட்டு போயிட்டு ஒரு அஞ்சு பேர் உட்கார்ந்து டீ காபி குடிச்சிட்டு வந்துருவோம் இன்னும் கொஞ்ச பேர் இருக்காங்க வாங்கிட்டு போற ஸ்வீட் அவங்களே சாப்பிட்டு வந்துருவாங்க சோ நம்ம எவ்வளவு

 பொருள் எடுத்துட்டு போறோமோ அவ்வளவு பேர் தான் போகணும் அர்த்தம் எல்லாம் அங்க இல்ல சோ இங்க மூன்று பொருள்கள் வைக்கப்படுகிறது அதான் முக்கியம் மூன்று பொருட்கள் வைக்கப்படுகிறது கொண்டு போய் இயேசுவுக்கு முன்பாக பொன்னை வைத்தார்கள் தூபவ வர்க்கத்தை வைத்தார்கள் வெள்ளைப் போலத்தை வைத்தார்கள் ஏன் இவ்வளவு காரியங்கள் இருக்கும் பொழுது இயேசு கிறிஸ்துவின் இடத்திலே காணிக்கையாக இது செலுத்தப்பட்டது அதுதான் ரொம்ப முக்கியம் ஒவ்வொரு காரியத்தையும் செய்யறதுக்கு முன்னாடி நம்ம ஏன் செய்யறோம் அப்படின்னு பார்க்கணும் ஐயா அழகா சொன்னாங்க இந்த விஷயத்தை இன்னைக்கு

 கிறிஸ்து பிறந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை ஆனால் என்னைக்கோ ஒரு நாள் பிறந்தார் அதை நாம வச்சுக்கொள்றோம் அப்படின்னு சொன்னாங்க சொல்லிட்டு ஒரு காரியத்தை சொல்றாங்க கிறிஸ்து பிறந்ததுனால இது கிறிஸ்மஸா இல்ல கிறிஸ்மஸ்ங்கிறதுனால கிறிஸ்து பிறந்தாராத நம்ம தான் முடிவு பண்ணிக்கணும்னாங்க அந்த மாதிரி ஒவ்வொரு காரியத்தையும் நாம யோசிக்கும் பொழுது ட்ரெடிஷனலா யோசிக்காம இது மூணுத்துக்கும் பின்னாடி என்ன இருக்கு ஏன் இந்த மூணு காரியத்தை கொண்டு வந்து வைத்தார்கள் வைப்பதற்கு என்ன காரணம் அதுவும் இயேசுகிட்ட கொண்டு வந்து ஒரு முன்னணையில

 மாட்டுத் தொழுவத்திற்கு முன்னணையில் கொண்டு வந்து வச்சு அதை சமர்ப்பிக்கிறதுக்கு காணிக்கை செலுத்துவதற்கு என்ன காரணம் என்பதுதான் முக்கியம் முதலாவது அங்கே ரெண்டு 11 மத்தேயு எழுதின சுவிசேஷம் சொல்லுகிறது அவர்கள் பொன்னை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தினார்கள் அப்படின்னு இருக்கு இந்த பொன் என்பது எதற்கான அடையாளம் வேதத்தை பொறுத்தவரைக்கும் எதற்கான அடையாளம்னு கேட்டீங்கன்னு சொன்னா ராஜ்யபாரம் மகிமைக்கான அடையாளம் ஒரு அரசாட்சியும் கவர்மெண்ட்டும் நடக்கும்போது அதனுடைய மகிமையை குறிக்கக்கூடியது தான் பொன் பசும் பொன் என்பது பரிசுத்த ஆவியானவருக்கான

 அடையாளம் அது யாத்திராகமத்திலும் லேவியராகமத்திலும் ஆண்டவர் சொல்லுவார் ஆசாரிய கூடாரத்தில் பசும் பொன்னினாலே அப்படின்னு சொல்லுவார் அதே வேளையிலே பொன் என்பதற்கான ஒரு அடையாளம் என்னன்னு கேட்டீங்கன்னா மகிமை பிரசென்ஸ் அதோடு கூட ராஜ்யபாரம் வாசிங்க தானியேல் தீர்க்கதரிசன புஸ்தகம் இரண்டாம் அதிகாரம் தானியேல் புஸ்தகம் இரண்டாம் அதிகாரம் 37 38 வாசிங்க ராஜாவே நீர் ராஜாதி ராஜாவாய் இருக்கிறீர் பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார் சகல இடங்களிலும் உள்ள மனுபுத்திரரையும் வெளியின்

 மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து உம்மை அவைகளை எல்லாம் ஆளும்படி செய்தார் பொன்னான அந்த தலை நீரே அப்போ ஒரு நேபுகாத் நேச்சார் ஒரு சிலையை பார்க்கிறார் அதுல ஒரு சிலையில சொப்பனத்துல அது பொன்னாக இருக்கிறது தலை அந்த பொன் என்பதற்கான விளக்கத்தை தான் இந்த வசனம் கொடுக்குது 2:37 38 வசனம் சொல்லுது சகல இடங்களிலும் உள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்து பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து அப்படின்னு இருக்கு இப்போ இயேசு கிறிஸ்து வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் இந்த உலகத்தின் ராஜ்ஜியம் யார்

 கையில இருக்குது அப்படின்னு பார்த்தீங்கன்னு சொன்னா உங்க எல்லாருக்கும் தெரியும் நான்காம் அதிகாரம் மத்தேயுல பிசாசு இயேசுவை கொண்டு போய் மலை மேல நிறுத்தி ஒரு வார்த்தை சொல்றான் இந்த உலகத்தின் ராஜ்ஜியங்களும் அதன் மகிமைகளும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது எனக்கு இஷ்டமானவனுக்கு நான் கொடுக்கிறேன் அப்படின்னு சொல்றான் ஆதாம் மூலமாக இந்த உலகத்தில் ஆளுகை தொடங்கியது ஆண்டுகொள்ளுங்கள்னு ஆண்டவர் ஆதாம் கிட்ட சொன்னார் ஆதாம் அதை இழந்துட்டார் அது பிசாசு கைக்கு போயிருச்சு ஏறக்குறைய 4000 வருஷமா இந்த ஆளுகை பிசாசின் கையில் இருக்கிறது இப்ப இந்த பொண்ணை கொண்டு வந்து

 வைப்பதற்கான அடையாளம் என்னன்னா உலகத்தினுடைய ராஜ்ஜியம் மகிமை இது அத்தனையும் பராக்கிரமம் எல்லாத்தையும் ஆளுகை செய்கிற ஒருத்தர் பிறந்திருக்கிறார் அவர் இனி அவர்தான் ஆளுகை செய்யப் போகிறார் என்று அர்த்தம் நாம் தேவனை இயேசு கிறிஸ்துவை பிறந்ததற்கு என்ன காரணமாக நினைக்கிறோம் நாம பொறுத்தவரைக்கும் நம்ம பர்த்டேவும் இயேசு பர்த்டேவும் ஒரே மாதிரி ஆக்கிட்டோம் இன்னைக்கு ஆனா நம்ம பர்த்டே விட இயேசு பர்த்டே மோசமான போயிட்டு இருக்குது என்ன மோசமா போயிட்டு இருக்குதுன்னு கேட்டீங்கன்னா பொதுவா நம்ம பையனுக்கு பர்த்டே வந்தா நம்ம பையனுக்கு தான் டிரஸ் எடுப்போம் ஆனா இயேசுநாதருக்கு

 பர்த்டே வந்தா நமக்கு தான் எடுத்துக்கிறோம் அவருக்கு எடுக்கல இப்ப இதுதான் இங்க பிரச்சனையே இயேசுக்கு பர்த்டே வருது அப்ப நீங்க யாருக்கு டிரஸ் எடுக்கணும் இயேசுவுக்கு தானே எடுக்கணும் நாம என்னைக்காவது இயேசுவுக்கு டிரஸ் எடுத்திருக்கிறோமா அப்ப நீங்க கேட்கலாம் இது என்னங்க பைத்தியக்காரத்தனமா இருக்குது இயேசுநாதருக்கு டிரஸ் எடுக்க முடியுமானா எடுக்கலாம் எடுக்கலாம் நல்லா எடுக்கலாம் ஒவ்வொரு வருஷமும் எடுக்கலாம் டெய்லி கூட எடுக்கலாம் ஏன்னா இயேசு என்ன சொல்றாருன்னா இந்த சிறியோரில் யாருக்கு எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்திருக்கிறீர்கள்னு

 சொல்றாரு அப்ப இயேசுநாதருக்கு நீங்க பர்த்டே கொண்டாடனும்னா முதல்ல போய் ஏழைகளுக்கு எடுத்துக் கொடுக்கணும் அவனுக்கு டிரஸ் எடுத்துக் கொடுக்கணும் இருக்கிற மொத்த நல்ல டிரஸ்ஸையும் நம்ம போட்டுக்கிட்டு இருக்கிற நல்ல கேக் எல்லாம் வாங்கி நம்ம சாப்பிட்டுபுட்டு இந்த மதியானத்துக்கு மேல எப்படியும் பிரியாணி அடிச்சு நொறுக்கிருவீங்க அதையும் சாப்பிட்டுபுட்டு எல்லாம் இன்னைக்கு முழுக்க முழுக்க நம்ம சந்தோஷமா இருந்துபுட்டு அதுக்கு பேரு இயேசுவுக்கு பதில் இப்ப இயேசுநாதர் உட்கார்ந்து என்ன பார்த்துட்டு இருப்பாருன்னு நினைக்கிறீங்க அவர் மேல இருந்து என்ன

 பார்த்துட்டு இருப்பாருன்னு நினைக்கிறீங்க படுபாவிங்க இவங்களே கொண்டாடுறாங்க இவங்களே சாப்பிடுறாங்க எல்லாம் சந்தோஷமா இருக்குறாங்க பர்த்டே மட்டும் என் பேரை வச்சு கொண்டாடிட்டு இருக்காங்க நீங்க கொண்டாடனும்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா உங்க பையனுக்கு பர்த்டேக்கு உங்க பையனுக்கு டிரஸ் எடுக்கிற மாதிரி இயேசுநாதருக்கு எடுங்க ஏழைகளுக்கு எடுங்க நீங்க எடுக்க வேணாம்னு சொல்ல உங்களுக்கு முதல்ல அவங்களுக்கு எடுத்துக் கொடுத்துருங்க அவங்களுக்கு ஒன்னு கொடுங்க அவங்களுக்கு ஒரு சாப்பாடு கொடுங்க உங்க வீட்ல அஞ்சு பேர் சாப்பிடும்போது வெளிய ஒரு ரெண்டு பேருக்கு சாப்பாடு கொடுங்க

 வாங்குற பிரியாணியை அஞ்சு ஏழு பேருக்கா சேர்த்து வாங்குங்க இதுதான் ஆசீர்வாதம் இன்னைக்கு பர்த்டே நாம இப்படி ஆயிட்டோம் இயேசுநாதர்ட்ட கொண்டு போய் ஒரு காணிக்கையும் கொடுக்கிறது இல்லை அப்ப இயேசு கிறிஸ்துவினுடைய பர்த்டேவை நாம தப்பா கொண்டாடுற மாதிரி இயேசு பிறந்ததையும் தப்பா புரிஞ்சுகிட்டோம் நம்ம பிறந்திருக்கிற மாதிரியே அவரையும் புரிஞ்சுக்கிற மாதிரி வச்சுக்கிட்டோம் ஆனால் இயேசு பிறந்ததனுடைய நோக்கம் என்ன தெரியுமா 4000 வருஷம் இழந்து போன அதிகாரத்தை உலகம் பரலோகத்திலிருந்து கொடுக்கப்பட்டதான அதிகாரத்தை மனுஷன் இழந்துட்டான் அதை மீட்கும்படி ஆண்டவர்

 பிறந்திருக்கிறார் அப்போ உங்க வீட்ல இயேசு பிறந்திருக்கிறார் உங்களுக்குள்ள இயேசு பிறந்திருக்கிறார்னா முதல்ல இயேசு கிறிஸ்துவினுடைய ராஜ்ஜியம் உங்களுக்குள்ள இருக்குதான்னு பார்க்கணும் ஆளுகை உங்களுக்குள்ள இருக்குதான்னு பார்க்கணும் மகிமை உங்களுக்குள்ள இருக்குதான்னு பார்க்கணும் பாருங்க இயேசு கிறிஸ்து வரும்போது இது நடக்குது ஆனால் இயேசு கிறிஸ்து போகும்போது என்ன நடந்துருச்சு பாருங்க வாசிங்களேன் வெளிப்படுத்தின விசேஷம் ஒன்றாம் அதிகாரம் வெளிப்படுத்தின விசேஷம் ஒன்றாம் அதிகாரம் அஞ்சாவது வசனம் வாசிங்க உண்மையுள்ள சாட்சியும் உண்மையுள்ள சாட்சியும்

 மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும் மரித்தோரிலிருந்து முதல் பிறந்தவரும் பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசு கிறிஸ்துவினாலும் பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி யாரு இப்ப பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியாக இருக்கிறது யாரு இயேசு கிறிஸ்து இயேசு வரும்போது யூதருக்கு ராஜாய் பிறந்திருக்கிறார் சொன்னாங்க ஆனால் உண்மையிலேயே பூமியில் இருக்கிற அத்தனை பேருக்கும் இயேசு இப்பொழுது ராஜாவாக இருக்கிறார் இப்ப ராஜாவா இருக்கிறார் அதான் ரொம்ப முக்கியம் அப்ப அவர் ராஜாவா இருக்கிறார்னா அதுக்கு முன்னாடி அவர் ஒரு ஜெபம் பண்ணாரு உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக

 அந்த ராஜ்ஜியத்தை கொண்டு வருவதற்கு தான் இயேசு பூமிக்கு வந்தார் பரலோகத்தின் ராஜ்ஜியம் பூமிக்கு வரணும் பரலோகத்தினுடைய ராஜ்ஜியத்தினுடைய ஆளுகை பூமிக்குள்ள வரணும் அதை கொண்டுவர வர வந்திருக்கிறார் அடையாளம் தான் பொன்னை கொண்டு போய் அவர் பாதத்திலே வைத்தார்கள் அதனாலதான் நேபுகாத் நேச்சார் கிட்ட இருந்த ஆளுகை அத்தனை பேர் கிட்ட இருந்த எல்லா ஆளுகையும் இயேசுவின் கைக்கு வந்துவிட்டது இன்னைக்கு நம்மளை பொறுத்தவரைக்கும் அவர் ராஜாவா இருக்கிறார் இவர் ராஜாவா இருக்கிறார் நான் அதான் அடிக்கடி சொல்லுவேன் அமெரிக்கா வரைக்கும் யார் ஜனாதிபதியா வருவாங்கன்னு நம்ம ஜெபம்

 பண்ண ஆரம்பிச்சுட்டோம் பயங்கரமா அட்வான்ஸ் ஆயிட்டோம் நம்ம இப்போ ஒரு காலத்துல தமிழ்நாட்டுக்கு மட்டும் ஜெபம் பண்ணோம் இந்தியாவுக்கு ஜெபம் பண்ணோம் இப்ப நம்ம அடுத்த ரேஞ்சுக்கு எங்க போயிட்டோம்னா அமெரிக்காவுக்கு அடுத்த ஜனாதிபதி யார் வருவார் என்ற வரைக்கும் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க ஆனா இவங்க சொன்ன எதுவும் நடக்கல விட்டுருவோம் அது அப்படியே இருக்கட்டும் ஓரமா ஆனால் இந்த உலகத்தினுடைய ராஜாக்கள் யார் வந்தாலும் நமக்கு கவலை இல்லை எந்த நாட்டுக்கு யார் ராஜாவா வந்தால் என்ன அத்தனை பேருக்கும் சர்வ வல்லமை உள்ளவர் ஒருவர் ராஜாவாக

இருக்கிறார் அவர் உங்களுக்குள் இருக்கிறாரா என்பதுதான் கேள்வி அவருடைய ஆளுகை உங்களுக்குள்ள இருக்குதா அவருடைய ஆளுகை உங்களுடைய வீட்டுக்குள்ள இருக்குதா இன்னைக்கு கிறிஸ்து இருக்கிறார் ஆளுகை இருக்கிறதா உங்க வீட்டை நடத்துகிறது யார் உங்க வீட்டுக்குள்ள அதிகாரம் யார் கையில் இருக்கிறது கிறிஸ்துவின் கையில் இருக்குதா இன்னைக்கு போய் பாருங்க ஒரு வீட்ல ரிமோட்டை யார் ஆளுகை செய்யறதுங்கிறதுலயே பெரிய சண்டை நடந்துட்டு இருக்குது ரிமோட்டை எனக்கு கொடுக்க மாட்டேங்குறாங்கன்னு கணவர் ஒரு பக்கம் சண்டை மனைவி ஒரு பக்கம் சண்டை பிள்ளைங்க ஒரு பக்கம் சண்டை அப்புறம் இப்ப எப்படி

 முடிவு எடுத்துட்டாங்கன்னா ரூமுக்கு ஒரு டிவி ஆயிப்போச்சு உள்ள ரூமுக்குள்ள ஒரு டிவி ஹாலுக்குள்ள ஒரு டிவி நான் உள்ள பார்த்துக்கிறேன் நீ வெளிய பார்த்துக்க இன்னும் இப்ப ஒரு படி மேல போயி ஆளாளுக்கு போன் எடுத்துக்கிட்டு ஒரு ரூம்ல உட்கார்ந்து இருக்குது எந்த அளவுக்கு யாருடைய ஆளுகையும் யார் கையிலும் இல்லை இப்ப என்ன சொல்றோம் என் பேச்சை என் மனைவி கேட்கிறது இல்ல இது கணவன் சொல்றாரு மனைவி சொல்றாங்க பிள்ளைங்க என் பேச்சை கேட்கிறதே இல்லை மனைவி சொல்றாங்க பெரிய அண்ணன் சொல்றான் தம்பி என் பேச்சை கேட்கவே மாட்டேங்குறான் இப்ப ஸ்கூல்ல டீச்சர்ஸ்

 சொல்றாங்க பிள்ளைங்க இப்ப எல்லாம் எங்க பேச்சை கேட்கிறதே இல்ல அதோட அர்த்தம் என்ன அதிகாரம் அத்தாரிட்டி இப்ப இல்ல போயிருச்சு யார்கிட்டயுமே இல்ல அப்பா சொல்றதையே பசங்க கேட்க மாட்டேங்குறாங்க அம்மா சொல்றதை கேட்க மாட்டேங்குறாங்க யார்கிட்டயுமே அத்தாரிட்டி இல்ல ஆனால் வசனம் சொல்லுது இயேசு பிறந்தபோது அத்தாரிட்டி வந்தது ராஜ்ஜியம் வல்லமை மகிமை அத்தனையும் அவர் பாதத்துக்கு வந்துருச்சு இது முதல் கொண்டு ராஜா பிறந்திருக்கிறார் அதனால்தான் வெளிப்படுத்தல் சொல்லுது பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி அப்ப இயேசு உங்க வீட்ல இருந்தா இயேசு தான் ராஜாவா

 இருக்கணும் உங்க வீட்ல இயேசு ராஜாவா இருக்கிறாரா உங்க வீட்ல இயேசுவினுடைய ஆளுகை நடைபெறுகிறதா உங்க வீட்ல போய் பாருங்க யாருடைய ஆளுகை நடக்குது காலையில எழுந்திருச்சு போய் பாருங்க இயேசுநாதர் உங்க வீட்ல வீட்ல இருக்கிறார்ன்றதுக்கான எந்த அடையாளமும் இருக்காது உங்க பிள்ளைங்க ஸ்கூலுக்கு போகிற வரைக்கும் இயேசுநாதர் உங்க வீட்ல இருக்கிறதுக்கான எந்த அடையாளமும் இருக்காது காரணம் என்னன்னா உங்க பிள்ளைங்க ஸ்கூலுக்கு போகிற வரைக்கும் மூன்றாம் உலக யுத்தம் ஒன்னு நடக்கும் இல்லையா அடித்தடி நடக்கும் சூ எங்க சாக்ஸ் எங்க அது எங்க இத எங்க அப்படியே புடிச்சு அப்படியே இந்த அம்மா

 பாவமா இருக்கும் அந்த அம்மாவை பார்த்தா கால்ல சக்கரம் கட்டாத குறைதான் அப்படியே கிச்சனுக்கும் ஹாலுக்கும் ஓடிக்கிட்டே இருக்கும் இதுல அந்த அம்மாவுக்கு எப்ப ரொம்ப கோவம் வரும் தெரியுமா இவ்வளவு ஓடிக்கிட்டு இருக்கும்போது ஒரு ஆள் உட்கார்ந்து பேப்பர் படிச்சிட்டு இருப்பார் அந்த வீட்ல யாரு அவங்க வீட்டுக்காரர் அந்த அம்மாவுக்கு அந்த வீட்டுக்காரரை பார்க்கும்போது அவ்வளவு கோவம் வரும் ஆனா வீட்டுக்காரரை திட்ட முடியாது நேரடியா அதனால பொத்தாம் பொதுவா சொல்லும் நீங்க எல்லாம் உருப்படவே மாட்டீங்கடா பையனை சொல்ற மாதிரியே சொல்லும் அந்த பையன்

 ஸ்கூலுக்கோ பொண்ணு ஸ்கூலுக்கு போகிற வரைக்கும் அந்த வீடு மூன்றாம் உலகம் யுத்தம் மாதிரி இருக்கும் இயேசுநாதர் வீட்ல இருக்கறதுக்கான எந்த அடையாளமும் இருக்காது இப்ப பாருங்க எக்ஸாம் முடிஞ்சிருச்சு போன சனிக்கிழமை பையன் சொல்றான் எக்ஸாம் முடிஞ்சிருச்சுன்னு அம்மா ஷாக் ஆயிருச்சு எப்படா திறப்பாங்க ஸ்கூல் அந்த அம்மாதான் முதல் கேள்வி கேட்குது ஸ்கூல் எப்ப திறக்குறாங்க மூணாம் தேதி மூணாம் தேதியா அந்த அம்மாவுக்கு அவ்வளவு ஷாக்கா இருக்கு ஏன்னா இவன் வீட்ல இருந்தா அவ்வளவு தொல்லை வீடு வந்து மூன்றாம் உலகத்தை விட மோசமா போயிட்டு இருக்கு அடுத்து

 சாயங்காலத்தில் போய் பாருங்க உங்க வீட்டை உங்க வீட்ல சண்டை இருக்காது ஆனா சீரியல்ல போடுற சண்டை உங்க வீட்ல போயிட்டே இருக்கும் எல்லா வீட்லயும் சாயங்காலம் ஏழு மணிக்கு மேல சண்டை சத்தம்தான் அவளை கொல்லாம விடமாட்டேன் அவள் குடும்பத்தை நான் பிரிக்காம விடமாட்டேன் இப்படி எல்லா வீட்லயும் சண்டை இப்ப இவங்க என்ன சொல்றாங்க பாடும்போது எங்க வீட்டுக்குள் இயேசுவின் ராஜ்ஜியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது யார் சொன்னது 100% பொய் இன்னைக்கு கிறிஸ்தவர்கள் பண்டிகை என்கிற பெயர்ல உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் பண்டிகையினுடைய நோக்கம் என்ன அது எதை தெரியப்படுத்துகிறது

 பஸ்கா பண்டிகை இயேசு கிறிஸ்துவினுடைய மரணத்தை தெரியப்படுத்துகிறது அப்ப இயேசு பிறந்திருக்கிறார்னா உங்க வீட்ல இருக்கணும் இல்ல உங்க வீட்ல ஆளுகை இருக்கணும்ல உங்க வீட்ல இயேசுநாதர் ஆளுகை செய்கிறார் அந்த ஒரு சிம்டமாவது இருக்கணும்ல உங்க வீட்ல யார் ஆளுகை செய்றாங்கன்னே தெரிய மாட்டேங்குது சில வீடுகள்ல போனா தப்பா எடுத்துக்காதீங்க நான் உங்களை சொல்லல சில வீடுகளுக்கு போனா லிட்ரலா வீட்ல பிசாசு இருக்கிறதை நீங்க பார்க்கலாம் அப்படியே தலைவிரி கோலத்தில் அந்த அம்மா கத்திக்கிட்டு உட்கார்ந்து இருக்கும் அவர் ஒரு பக்கத்துல பனியனை போட்டு கத்திக்கிட்டு உட்கார்ந்து

 இருப்பார் சுத்தி இருக்கிற அத்தனை வீட்டுக்காரரும் வாசல்ல உட்கார்ந்து பார்த்துட்டு இருப்பான் அவனுக்கு அதுதான் என்டர்டைன்மென்ட் அவன் சொல்றான் அது டெய்லி நடக்குங்கன்றான் அந்த வீட்ல இயேசுநாதர் இருக்கிறாரா முதல்ல இன்னும் கொஞ்ச பேருக்கு இருக்கு சண்டை போட்ட உடனே வீட்ல போடுறது பிடிக்காது அவங்களுக்கு கிடுகிடுகிடுன்னு வாசலை தாண்டி வெளிய வந்துருவாங்க என்னமோ பாக்சிங் போடுற மாதிரி கிறிஸ்தவ குடும்பத்துல முதல்ல கிளம்பி வெளிய வந்து வாசல்ல சண்டை போடுறது தான் அவங்களுக்கு பெரியது என்ன நீங்க சாட்சி கொடுக்கிறீங்க இதுல வேற கிளம்பி கையில பைபிளோட பிள்ளை

 குட்டிகளை கூட்டிட்டு புதுசா டிரஸ் போட்டுக்கிட்டு நாங்க எல்லாம் சர்ச்சுக்கு போறோம் எங்க போறீங்க சர்ச்சுக்கு போறோம் இதுல வேற இப்ப நீங்க போயிட்டு அஞ்சு வகை பலகாரம் ஏழு வகை பலகாரம் தட்டுல வச்சு பக்கத்து வீட்டுக்கு எடுத்துட்டு போவீங்க அவன் அப்படியே பார்த்துக்கிட்டே இருப்பான் நேத்து சண்டை போட்ட வீடா இது இன்னைக்கு இவ்வளவு நல்லவங்களா இருக்குறாங்க அவங்களே சொல்லுவான் ஒரு நாள்தான் அப்படி இருப்பாங்க நாளைக்கு பாருங்க அவங்கள பத்தி தெரியும்பான் இன்னைக்கு பண்டிகை கொண்டாடுகிறதுனாலே நீங்கள் கிறிஸ்தவர்கள் தெரியக்கூடாது உங்கள் வீட்டின் ஒவ்வொரு

 நாள் சாட்சியும் நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று தெரிய வேண்டும் இயேசு உங்க வீட்டுக்குள்ள இருக்கிறது தெரியணும் தெரியுதா அதான் கேள்வி உங்க வீட்டுக்குள்ள கிறிஸ்துவின் ராஜ்ஜியம் இருக்கா ஆளுகை வந்துருச்சா யோசிச்சு பாருங்க இயேசு பிறந்தாருன்னு தெரிஞ்ச உடனே ஏரோது கலங்கினான் இருக்கு எருசலேம் நகரத்தார் கலங்கினார்கள் காரணம் என்ன அந்த ராஜ்ஜியம் வந்த உடனே மத்த இருக்கிற அத்தனை பேரும் பயப்படுறான் அப்போ உங்களுக்குள்ள கிறிஸ்து வந்துட்டாருன்னா உங்க வீட்டுக்குள்ள கிறிஸ்து பிறந்துட்டாருன்னா உங்களுக்குள்ள கிறிஸ்துவுக்குள்ள நீங்க பிறந்துட்டீங்கன்னா உங்க வீட்டுக்குள்ள

 ஒரு அத்தாரிட்டி இருக்கும் ஒரு ராஜ்ஜியம் இருக்கும் இன்னைக்கு கிறிஸ்துவின் ராஜ்ஜியம் வீட்ல இல்ல வேற யாருடைய ராஜ்ஜியமோ நடந்துட்டு இருக்கு அதை முதல்ல சரி பண்ணுங்க அதை சரி பண்ணுவது தான் உண்மையிலேயே கிறிஸ்து பிறந்திருக்கிறார்னு அர்த்தம் உங்க வீட்டுக்குள்ள ஒரு வருஷம் இப்ப நீங்க எப்படியும் ஜனவரி மாசம் ஒன்னாம் தேதி ஆளாளுக்கு ஒரு தீர்மானம் எடுப்பீங்க இல்ல ஒன்னாம் தேதி மாதிரி தீர்மானம் எடுக்கிற நாளும் உலகத்திலேயே என்னைக்கும் இல்லை இரண்டாம் தேதி மாதிரி தீர்மானத்தை மீறுற நாளும் கிடையாது ஒன்னாம் தேதி இப்ப தீர்மானம் எடுப்பீங்க

 என்ன எடுப்பீங்க நிறைய தீர்மானம் எடுப்பீங்க இன்னையிலிருந்து வாக்கிங் போக போறேன் அப்படின்னு இரண்டாம் தேதியே போகமாட்டீங்க என்ன முடிவு எடுப்பீங்க நாளையிலிருந்து போலாம் அது கதை முடிஞ்சுச்சு நீங்க இந்த தீர்மானத்துக்கு எல்லாம் பதிலா இது எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு தீர்மானம் எடுங்க இந்த வருஷத்துல இருந்தாவது எங்க வீட்டுக்குள்ள கிறிஸ்துவின் ராஜ்ஜியம் நடக்கணும்னு நாங்க விரும்புறோம் ஜெபம் பண்ணுங்க நீங்க கொண்டு வர முடியாது நீங்க ஜெபம் பண்ணுங்க உங்களால் கொண்டுவர முடியும் இன்னைக்கு அநேக வீடுகள் கிறிஸ்து உள்ளே ஆளுகை செய்கிறாரானே தெரியல அந்த இடத்துல தான்

 இருக்கு இரண்டாவது அந்த வசனத்தை திருப்பி வாசிங்க பார்ப்போம் மத்தேயு எழுதின சுவிசேஷம் ரெண்டு 11 வாசிங்க அந்த வீட்டுக்கு பிரவேசித்து பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு சாஷ்டாங்கமாய் விழுந்து அதை பணிந்து கொண்டு தங்கள் பொக்கிஷங்களை திறந்து பொன்னையும் தூப வர்க்கத்தையும் வெள்ளைப் போலத்தையும் அதற்கு காணிக்கையாக வைத்தார்கள் இரண்டாவது என்ன வச்சாங்க பொன்னையும் தூப வர்க்கத்தை வைத்தார்கள் தூபவ வர்க்கம்னா என்ன முதல்ல அது நமக்கு தெரியணும் தூப வர்க்கம்னா என்ன எதை குறிக்கிறது புதிய ஏற்பாட்டில் தூபவ வர்க்கம் என்பது எதை குறிக்கிறது வாசிங்க

 வெளிப்படுத்தின விசேஷம் அஞ்சாம் அதிகாரம் எட்டாவது வசனத்தை வாசிங்க வெளிப்படுத்தல் அஞ்சு எட்டு வாசிங்க அந்த புஸ்தகத்தை அவர் வாங்கினபோது அந்த நான்கு ஜீவன்களும் 24 மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூப வர்க்கத்தால் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூப வர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து நல்லா கவனிங்க அப்போ தூப வர்க்கம் என்பது எதை குறிக்கிறது ஜெபங்களை குறிக்கிறது இரண்டாவது இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார்

 என்றால் உங்களுக்குள் ஒரு நிச்சயம் இருக்கணும் என்னுடைய எல்லா ஜெபங்களுக்கும் பதில் கொடுக்கிறவர் ஒருவர் என் வீட்டுக்குள் இருக்கிறார் என்று அர்த்தம் ஏன்னா இயேசு கிறிஸ்துவுக்கு முன்னாடி ஜெபம் பண்ணாங்க ஆண்டவர் கேட்டார் பதில் கொடுத்தார் ஆனால் இயேசு வந்த பிறகுதான் வசனம் தெளிவா இருக்கு என் நாமத்தினாலே நீங்கள் எவைகளை கேட்பீர்களோ அவைகளை பெற்றுக் கொள்வீர்கள் இன்னைக்கு வீட்ல உங்க வீட்ல இருக்கிற ஜெபம் எப்படிப்பட்டதாக இருக்கிறது உங்க வீட்ல பிரேயர் இருக்குதா முதல்ல கிறிஸ்தவங்க வீடுகள்ல இந்த ஃபேமிலி பிரேயர்னு ஒன்னு இருக்கும் இருக்கா உங்க வீட்ல அப்படி ஏதாவது

 நடக்குதா உலகத்துக்கே ஃபேமிலி பிரேயர் சொல்லிக் கொடுத்ததே ஆரம்பத்துல நம்ம தான் ஆனா இன்னைக்கு ஃபேமிலி பிரேயர் ஃபேமிலி பிரேயரும் இல்ல பிரேயரும் இல்ல உங்க வீட்ல எப்ப பிரேயர் பையனுக்கு பர்த்டே வந்தா பாஸ்டரை கூப்பிட்டு இருக்கிறோம் வீட்ல பிரேயர் கல்யாண நாள் வந்தா பாஸ்டர் கூப்பிட்டு இருக்கிறோம் வீட்ல பிரேயர் யாராவது இறந்துட்டாங்கன்னா வீட்ல பிரேயர் அப்புறம் பிரேயர் மீட்டிங் இவ்வளவுதான் இருக்கு பிரேயர் தனிப்பட்ட முறையில உங்க வீட்ல ஜெபம் இருக்குதா ஆண்டவரை நோக்கி ஜெபம் பண்றீங்களா ஏதாவது பிரச்சனை வந்தா ஜெபம் பண்றீங்க ஏதாவது அது கூட இப்போ

 கொஞ்சம் நீங்க அட்வான்ஸ் ஆயிட்டீங்க ஏதாவது பிரச்சனை வந்தா ஊழியக்காரருக்கு போன் பண்ணி ஜெபம் பண்ண சொல்றீங்க எங்களுக்காக நீங்க கொஞ்சம் ஜெபம் பண்ணிக்கிறீங்களா எங்க வீட்ல இந்த பிரச்சனை போயிட்டு இருக்குது நீங்க ஜெபம் பண்றீங்களா முதல்ல உங்ககிட்ட ஜெபம் ஜெபம் அப்படின்னு ஒன்னு இருக்கா வீட்ல என்னைக்காவது உட்கார்ந்து ஜெபம் பண்றீங்களா முந்தி எல்லாம் வீடுகள்ல பார்த்தீங்கன்னு சொன்னா நான் சொல்றது ஒரு 30 வருஷத்துக்கு முன்னாடி 20 வருஷத்துக்கு முன்னாடி வீட்ல ரெண்டு டிவி வந்து ரெண்டு நாள்தான் வேலை செய்யும் ஒன்னு வெள்ளிக்கிழமை வேலை செய்யும் இன்னொன்னு

 ஞாயிற்றுக்கிழமை வேலை செய்யும் அதுக்கு மேல டிவில எந்த ப்ரோக்ராமும் இருக்காது வெள்ளிக்கிழமை ஒரு ப்ரோக்ராம் இருக்கும் ஒளியும் ஒளியும்னு ஞாயிற்றுக்கிழமை ஒரு ப்ரோக்ராம் இருக்கும் தமிழ் படம் போடுவாங்க இதைத் தவிர வேற ஒண்ணுமே இருக்காது அந்த காலத்திலேயே எல்லா நாளும் வீட்ல ஒரு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் உட்கார்ந்து கிறிஸ்தவங்க ஜெபம் பண்ணுவாங்க கிறிஸ்தவங்க வீட்ல ஜெப சத்தம் கேட்கும் பைபிள் எடுத்து வாசித்து ஒரு அதிகாரம் வாசிச்சு ரெண்டு பாட்டு பாடி ஒரு ஜெபம் பண்ணுவாங்க இன்னைக்கு கேட்டு பாருங்க உங்க வீட்ல ஜெபம் இருக்குதா உடனே எத்தனை பேரும்

 எல்லார்கிட்டயும் இருக்கக்கூடியதான ஒரு மிக முக்கியமான வார்த்தை வாயில நாலு வயசு பையன்ல இருந்து 80 வயசு தாத்தா வரைக்கும் சொல்றாங்க நாங்க ரொம்ப பிஸி இப்ப கேட்டா எல்லாரும் சொல்ற வார்த்தை என்ன ரொம்ப பிஸி என்னதான் பண்றீங்க பிஸின்னா நீங்க அப்படி என்னதான் பண்றீங்க கேட்டு பாருங்க போனை கையில எடுத்தாருன்னா முக்கால் மணி நேரம் இப்படி உருட்டிக்கிட்டே இருக்கிறார் என்னத்தான் உருட்டுவீங்களோ அப்படி என்னத்தான் பார்ப்பீங்களோ என்னத்த பார்த்து என்ன பண்ணிய அரை மணி நேரம் தேவ சமூகத்தில் உட்கார டைம் இல்லை வீட்ல போய் கேட்டு பாருங்க இன்னைக்கு ஃபேமிலி பிரேயர் பண்ணீங்களா

 அவர் ஒரு நேரத்துக்கு வராரு பிள்ளைங்க டியூஷனுக்கு போயிட்டு ஒரு நேரத்துல வராங்க நாங்க எப்படி ஜெபம் பண்றது அப்படின்னு கேக்குறீங்க உங்களுக்கே இது அநியாயமா தெரியலையா இப்ப பாருங்க யாராவது திடீர்னு கல்யாணத்துக்கு கூப்பிடுறாங்க சாயங்காலம் நம்ம கல்யாணம் சாயங்காலம் தான் வைக்கிறோம் ரிசப்ஷன் குடும்பமே கிளம்பி போறோமா இல்லையா ரிசப்ஷனுக்கு ஒரு ₹500 கையில எடுத்துக்கிட்டு அத்தனை பேரும் பிரியாணி திங்க போயிடுறோம் கல்யாணம் நடத்துறவன் காணாம போயிடுறான் ஏன்னா நம்ம போய் பிரியாணி ₹500 கொடுத்துட்டு கிட்டத்தட்ட ₹2000 ரூபாய்க்கு தின்னுடுறோம் சரி போனா

 போதும் விடுங்க அதுக்கு மட்டும் குடும்பமா போக முடியுதே பிள்ளைகளை பிளான் பண்ணி கூட கூட்டிட்டு போயி டியூஷனுக்கு போகும்போதே சொல்லிடுறாங்க ஒரு அரை மணி நேரம் முன்னாடி வந்துறா நாம ரிசப்ஷனுக்கு போக வேண்டி இருக்கு ஆபீஸ்க்கு போகும்போது வீட்டுக்காரருக்கு சொல்லிடுறாங்க சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வந்துருங்க ரிசப்ஷனுக்கு போக வேண்டி இருக்கு காலையில சமைக்கும் போதே சொல்லிடுறாங்க மத்தியானம் ஒன்னும் இல்ல வெறும் ரசம்தான் ஏம்மா சாயங்காலம் ரிசப்ஷனுக்கு போக வேண்டி இருக்கு நைட் திங்குற பிரியாணிக்கு மத்தியானமே ரசம் இவ்வளவு பிளான் பண்ணி

 குடும்பத்தை நடத்துற நீங்க ஒரு அரை மணி நேரம் ஜெபம் பண்றதுக்கு ஏன் பிளான் பண்ண மாட்டறீங்க உங்க வீட்ல பிரேயர் இருக்குதா ஆனா மத்த எல்லாம் இருக்குது எல்லாமே இருக்கு ஃபங்ஷன் இருக்கு அப்புறம் பிரண்ட்ஸ் ஓட பேசுறது இருக்கு போன் இருக்கு whatsapp இருக்கு facebook இருக்கு ஆனா எல்லாம் இருக்கு ஆனா எது மட்டும் இல்ல பிரேயர் மட்டும் இல்ல ஆனா இப்ப பாருங்க எல்லா வீடையும் பாருங்க இந்த 24 ஆம் தேதியிலிருந்து ஒன்னாம் தேதி வரைக்கும் ஜெகஜோதியா இருக்கும் கேட்டு பாருங்க ஸ்டார் எல்லாம் கட்டி எங்க வீட்டில் இயேசு பிறந்திருக்கிறார் எங்க வீட்டில் இயேசு பிறந்திருக்கிறார் உங்க

 வீட்ல இயேசு பிறந்தார் முதல்ல உங்க வீட்டில் இருக்க வேண்டியது தேவனுடைய ஆளுகையும் இரண்டாவது இருக்க வேண்டியது உங்க வீட்டில் ஜெபம் பிரேயர் அது ஒரு காணிக்கை பைபிள் சொல்லுது இன்னைக்கு ஜெபம் இருக்குதா ஆண்டவரை நோக்கி பார்க்கிற சுபாவம் இருக்குதா இன்னைக்கு உங்களுக்கு ஏத்த மாதிரி சில ஊழியக்காரங்களும் வந்துட்டாங்க உங்களுக்கு அவங்க சொல்றாங்க ஏதாவது ஒன்னுன்னா எங்களுக்கு போன் பண்ணுங்க நாங்க ஜெபம் பண்றோம் நீங்களும் அந்த முடிவெடுத்து உடனே லெட்டர் எழுதி போட்டுறது இல்லைன்னா ஒரு போன பண்ணி பேசிறது எங்களுக்கு இந்த மாதிரி ஒரு பிரச்சனை ஜெபம் பண்ணுங்க போட்டு போன

 வச்சிட்டு நீங்க நல்லா டிவி பாக்குறது அவங்க ஜெபம் பண்ணிட்டு இருப்பாங்க சிலர் வந்து ஊழியக்காரர்கிட்ட கேப்பாங்க பாஸ்டர் பாஸ்டர் எனக்காக நீங்க உபவாசம் பண்ணி ஜெபம் பண்ண முடியுமா அவர் உபவாசம் பண்ணுவாரு நீங்க என்ன பண்ணுவீங்க நீங்க நல்லா சாப்பிட்டுட்டு அடுத்த வாரம் வந்து திருப்பி சொல்லுவீங்க ஜெபம் பண்ணீங்களா பாஸ்டர் காரியம் நடக்கவே இல்லை திருப்பி அவர்கிட்ட கொஞ்சம் நல்லா பாஸ்டிங் பண்ணுங்க பாஸ்டர் அவரு பாஸ்ட் பண்ணி பாஸ்ட் பண்ணி அவர் உடம்பு போயிருச்சு நீங்க நல்லா பலுகி பெருகி நீங்க நல்லா ஆயிட்டீங்க ஆனா என்னன்னு கேட்டு பாருங்க

 நீங்க முழங்கால் போடுறது இல்ல நீங்க கேட்கிறது இல்ல நீங்க பிள்ளைகளுக்கு ஜெபத்தை சொல்லிக் கொடுக்கிறது இல்ல காலையில ஸ்கூலுக்கு பிள்ளைகளை அனுப்புறீங்களே என்னைக்காவது ஜெபம் பண்ணி அனுப்புறீங்களா ஒரு ரெண்டு நிமிஷம் முந்தி எல்லாம் என்ன செய்வாங்க வீடுகள்லன்னு கேட்டீங்கன்னா வெளிய போகும்போது ஒரு ஜெபம் பண்ணி நெத்தியில ஒரு சிலுவை போட்டு அனுப்புவாங்க சிலுவை போடுறது சரியா தப்பாங்கிற இடத்துக்கு நான் வரல ஆனா ஜெபம் பண்ணி அனுப்புறீங்களா முதல்ல அந்த பழக்கம் இருக்குதா காலையில போகும்போது பையன் எப்படி ஓடுறான் ஆட்டோ வந்துருச்சு ஓடு ஓடு ஓடுன்னு ஓடுறான் அவன்

 வாட்டர் பாட்டில் எடுத்தானா டிபன் பாக்ஸ் எடுத்தானான்னு அவன் அவன் ஓடுறான் அவங்க அம்மா பின்னாடியே ஓடுது டேய் டேய் டேய் டேய் டேய் இதை எடுத்துட்டு போடா வாட்டர் பாக்ஸ் எடுத்துட்டு போடான்னு பின்னாடியே ஓடுது எங்க ஜெபம் வீட்டுக்காரர் ஆபீஸ்க்கு கிளம்பும் போது அவர் எப்படி போறாரு டைம் ஆயிப்போச்சு அது ஆயிப்போச்சு ஹெல்மெட் எங்க அது எங்க இது எங்கன்னு அவரு ஓடுறாரு அவர் எங்க ஜெபம் அவரும் ஜெபம் பண்றது இல்ல அப்புறம் எப்படிதான் வீட்ல எதுல தான் ஜெபம் பண்ணுவீங்க அப்புறம் இயேசுநாதர் என்னத்துக்காக தான் வீட்ல இயேசுநாதர் இருக்கிறார் வெறும் கிறிஸ்தவங்கன்னு

 அடையாளம் காட்டுறதுக்கா இல்ல பண்டிகைக்கு மட்டும் சர்ச்சுக்கு வர்றதுக்கா அதுக்காகத்தான் இயேசுநாதரா இன்னைக்கு நிறைய பேர் வீடுகளிலே கிறிஸ்து அமைதியா உட்கார்ந்து இருக்கார் சிலர் எல்லாம் போர்டு போட்டிருப்பாங்க இந்த சைலெண்ட் லிசனர் அப்படின்னு அந்த ரேஞ்சுல தான் இருக்கு முதல்ல உங்க வீடுகள்ல இந்த வருஷம் ஒரு பொருத்தனை எடுங்க நாங்க ஃபேமிலியா பிரேயர் பண்ண போறோம் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் நேரமாவது கர்த்தருக்கு கொடுக்கப்போகிறோம் சாயங்காலத்திலயோ காலையிலயோ அல்லது பிள்ளைங்க டியூஷனுக்கு போயிட்டு வந்த பிறகோ வந்த உடனே சாப்பாடு போடாதீங்க வந்த உடனே அரை மணி நேரம்

 பிரேயர் முடிச்சிட்டு சாப்பாடு கொடுங்க அது ஐபிஎல் ஓடினாலும் சரி wwf ஓடினாலும் சரி எது டிவில ஓடினாலும் அந்த அரை மணி நேரம் கர்த்தருக்குன்னு இம்பார்ட்டன்ஸ் கொடுங்க நீங்க கொடுத்து பாருங்க கர்த்தர் உங்களை எப்படி அபிரதமாய் ஆசீர்வதிக்கிறாருன்னு பாருங்க இன்னைக்கு என்ன நடக்குது ஆண்டவரை தேடுறோம் ஒன்னும் ஆசீர்வாதம் வரமாதிரி இல்ல அப்படின்னு நீங்களே நினைச்சுக்கிறீங்க காரணம் என்ன ஒன்லி நேம் கிறிஸ்டியன்ஸ் பேர்தான் கிறிஸ்தவமா இருக்கு கிறிஸ்து உங்க வீட்டுக்குள்ள இருக்கிறார் என்பதற்கான அடையாளமே இல்லை இன்னையிலிருந்து ஒரு தீர்மானம் எடுங்க

 இன்னைக்கு சாயங்காலம் ஒரு தீர்மானம் எடுங்க போன உடனே டிவியை போட்டு உட்காராதீங்க இன்னைக்கு என்ன டிவில படம் போடுறான்னு போய் பார்க்காதீங்க போய் உட்கார்ந்து அரை மணி நேரமாவது குடும்பமா ஜெபம் பண்ணுங்க உங்க குடும்பத்துக்காக ஜெபம் பண்ணுங்க வேற யாருக்காவது பண்ண வேண்டிய அவசியம் இல்லை அது அப்புறம் அது ரெண்டாவது முதல்ல ஆண்டவர் சொல்றாரு உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் முதல்ல உங்க குடும்பத்துல ஒரு ஃபேமிலி பிரேயர் இன்னையிலிருந்து தீர்மானம் பண்ணுங்க எதுவா இருந்தாலும் அந்த அரை மணி நேரம் கர்த்தருக்குன்னு பிக்ஸ் பண்ணுங்க ஒரு

 கன்வினியன்ட் டைம் நீங்களே வச்சுக்கோங்க நீங்களே பிக்ஸ் பண்ணுங்க கணவர்ட்ட சொல்லுங்க இந்த நேரத்துக்கு வீட்டுக்கு வந்துருங்கன்னு சொல்லுங்க அவர் ஒன்னும் வெளிய ஒன்னும் செய்ய மாட்டாரு வேலையை முடிச்சிட்டு எவன் கூட உட்கார்ந்து டீ கடையில டீ குடிச்சிக்கிட்டு பஜ்ஜி தின்னுகிட்டு இருப்பால ஒன்னும் பெரிய அதானி அம்பானி வேலை பார்க்க போறதில்லை வெளிய வேலையை முடிச்சுப்புட்டு இருக்கிறவனை எல்லாம் கூப்பிட்டுக்கிட்டு டீ கடையில முனையில உட்கார்ந்துகிட்டு பஜ்ஜியை தின்னுபுட்டு நைட் ரெண்டு மணிக்கு எந்திச்சு நெஞ்சுல ஏதோ ஓடுது ஓடுதும்பாப்ல

 அதுக்கு அதான் காரணம் அந்த ஆளை முதல்ல வீட்டுக்கு வர சொல்லுங்க ஒரு எட்டு மணி 8:30க்கு எல்லாம் வந்துருங்கன்னுங்க பாவம் அந்த ஆள் வீட்டுக்கு வரதுக்கே பயப்படுறான் அது அர்த்த கொடுமையா இருக்கு வீட்டுக்கு போனா என்ன பிரச்சனையோ அப்படின்னு அவன் வெளியவே இருக்கான் அந்த ஆள்ட்ட சொல்லுங்க வேற எதுக்கும் வர சொல்லல வந்து ஜெபம் பண்ணத்தான் வர சொல்றோம் ஒரு எட்டு எட்டரைக்கு எல்லாம் வந்துருங்கன்னு சொல்லி கணவர் மனைவி பிள்ளைகள் உட்கார்ந்து ஒரு அரை மணி நேரம் கர்த்தருக்கு டைம் கொடுங்க உங்கள் குடும்பத்தை வருகிற வருஷத்தில் கர்த்தர் எப்படி ஆசீர்வதிக்கிறார் என்று

 பாருங்க நீங்கள் கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால் கர்த்தர் என்ன செய்வாராம் அநேகத்தின் மேல் அதிகாரியாய் வைப்பார் இந்த தீர்மானத்தை முதல்ல எடுங்க வீட்ல ஜெபம் இருக்கணும் தூப வர்க்கம் யோசித்து பாருங்க நோவா பேழையை விட்டு வெளியே வரார் வந்த உடனே பலி செலுத்துறார் பலி செலுத்துன உடனே வசனம் சொல்லுது கர்த்தர் அதை சுகந்த வாசனையாய் நுகர்ந்தார் கர்த்தர் என்ன பண்ணாராம் சுகந்த வாசனையாய் நுகர்ந்தார் அந்த நுகர்ந்த உடனே அவர் சொல்றாரு இனி நான் பூமியை அழிக்க மாட்டேன் அதான் பாதுகாப்பு நீங்க ஜெபம் பண்ண ஜெபம் பண்ண கர்த்தர் சுகந்த வாசனையாய் நுகர்ந்து அந்த

 தூப வர்க்கம் துதி ஸ்தோத்திரம் எல்லாவற்றையும் நுகர்ந்து உங்களுக்கு பாதுகாப்பை கட்டளையிடுகிறார் உங்களுக்கு ஆசீர்வாதத்தை கொடுக்கிறார் நீங்க என்ன நினைக்கிறீங்க நல்லா சம்பாதிக்கிறோம் செலவாகிட்டே இருக்குது ஒரு பத்து காசு கூட எடுத்து வைக்க முடியல சொல்றாங்க பொத்தல் பை மாதிரி போய்கிட்டே இருக்குது நல்லா ஆண்டவருக்கு ஒரு பேர் இருக்குது ஜெபத்தை கேட்கிறவரே மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள் இன்னைக்கு ஒரு ஒரு அரை மணி நேரம் பிரேயர் அந்த காலத்துல இப்போ ஐயா சொன்னார் இந்த சர்ச் 105 வருஷத்துக்கு முன்னாடியிலிருந்து இருக்குது 105 வருஷமா

 இருக்குது இந்த சர்ச்ன்னு இந்த சர்ச் எல்லாம் அந்த பரிசுத்தவான்கள் எப்படி கட்டி இருப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க எப்படி ஸ்தாபிச்சிருப்பாங்க திறமையினால் அல்ல முழங்காலினாலே ஜெபம் 105 வருஷம் இந்த நாட்டுக்குள்ள ஒரு சர்ச் நிக்குதுன்னா அது யாருடைய திறமையும் கிடையாது கர்த்தருடைய கிருபை அதுக்கு பின்னாடி பரிசுத்தவான்களுடைய ஜெபம் எத்தனையோ பரிசுத்தவான்கள் ஜெபம் தான் இன்னைக்கு சபைகள் நிக்குது அன்னைக்கு ஒரு சில ஊழியக்காரங்களோட பழகி இருக்கிறேன் வயசானவங்க அவங்களுக்கு ரொம்ப படிப்பறிவு எல்லாம் இருக்காது அவங்க இன்னைக்கு இருக்கிற மாதிரி பைபிள் காலேஜ் எல்லாம்

 முடிச்சவங்க எல்லாம் கிடையாது ஆனா அவங்களுக்கு ஒன்னு தெரியும் அவங்க சபைக்கு போகும்போது நான் பார்த்திருக்கிறேன் மூணு மணிக்கு எந்திரிப்பார் ஒரு பரிசுத்தவானை பார்த்தேன் ஒரு ஊழியக்காரர் மூணு மணிக்கு எந்திரிச்சார் எழுந்திருச்சு சர்ச்சை சுத்தி சுத்தி ஜெபம் பண்றார் அஞ்சு மணி வரைக்கும் அவர் வேற ஒண்ணுமே செய்யல ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்னு அவர் சர்ச்சை அவரே சுத்தி சுத்தி ஜெபம் பண்றார் காலையில கேட்டேன் என்ன பாஸ்டர் பண்றீங்க சர்ச்சை சுத்தி ஜெபம் பண்ணேன்னாரு எத்தனை வருஷமா பண்றீங்க அது ஒரு 30 40 வருஷமா பண்ணிட்டு இருக்கிறேன்

 ஏன் பாஸ்டர் சர்ச்சை பாதுகாக்கிறது நானா கிடையாது கர்த்தர் என்னால பண்ண முடிஞ்சது ஜெபம் மட்டும்தான் அதுதான் ரொம்ப முக்கியம் உங்கள் குடும்பத்தை காப்பாற்றுவது ஜெபம் உங்க பிள்ளைகளுடைய எதிர்காலம் கர்த்தருடைய கரத்தில் இருக்கு அதுக்கு உங்க பிரேயர் தான் ரொம்ப முக்கியம் ஏதோ ஒரு திட்டத்துக்கு எழுதி போட்டு பணத்தை கொடுத்துட்டா பிள்ளை கர்த்தர் ஆசீர்வதிப்பார்ன்னு நினைக்காதீங்க இல்லைன்னா யாருக்காவது போன் பண்ணி என் பிள்ளைக்கு ஜெபம் பண்ணுங்கன்னா உடனே பிள்ளையை ஆசீர்வதிப்பார் நினைக்காதீங்க உங்க பிள்ளைக்கு நீங்க தான் ஜெபம் பண்ணனும் நீங்க தான் முழங்கால்

 போடணும் ஒவ்வொரு நாளும் நீங்க தான் ஜெபிக்கணும் கடைசியாக மத்தேயு எழுதின சுவிசேஷம் 2:1 வாசியுங்கள் பார்ப்போம் அவர்கள் வாசிங்க அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்து கொண்டு தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும் தூபவ வர்க்கத்தையும் வெள்ளைப்போலத்தையும் அதற்கு காணிக்கையாக வைத்தார்கள் கடைசியா என்ன வச்சாங்க வெள்ளைப்போலத்தை வைத்தார்கள் வெள்ளைப்போலம்ன்றது என்ன தெரியுமா வெள்ளைப்போலம் உங்களுடைய அபிஷேகம் உங்கள் மேல் கர்த்தர் கொடுத்திருக்கிற அபிஷேகம் உங்கள் மேல்

 உள்ள சாட்சி உங்களுக்கு கர்த்தர் கொடுத்திருக்கிறதான சாட்சியின் வாழ்க்கை வாசிங்க யாத்திராகமத்தின் புஸ்தகம் 30 ஆம் அதிகாரம் மூன்றாவது வசனத்தை 23வது வசனம் வாசிங்க யாத்திராகமம் 30 23 மேன்மையான சுகந்த வர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப் போலத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்களின் படி 500 சேக்கல் எடையையும் சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாக 250 சேக்கல் எடையையும் உகந்த வசம்பில் 250 சேக்கல் எடையையும் லவங்கப்பட்டையில் 500 சேக்கல் எடையையும் ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து அதினால் பரிமல தைலக்காரன் செய்வது போல சுட்டப்பட்ட பரிமல தைலமாகிய சுத்தமான

 அபிஷேக தைலத்தை உண்டு பண்ணுவாயாக அது பரிசுத்த அபிஷேக தைலமாய் இருக்கக் கடவது இதான் வெள்ளைப்பழத்துக்கான அர்த்தம் ஏன் இயேசுகிட்ட கொண்டு வந்து வெள்ளைப்பழத்தை வச்சாங்க தெரியுமா அடுத்த ஆசாரியன் பிறந்திருக்கிறார் ஒரு ஒரு பக்கம் ராஜா பிறந்திருக்கிறார் ஒரு பக்கம் ஆசாரியன் பிறந்திருக்கிறார் வெள்ளைப்போலத்தை கொண்டு வந்து வைக்கும் பொழுது உங்களையும் என்னையும் கர்த்தர் அப்படித்தான் அழைச்சிருக்கிறார் வாசிங்க இன்னொரு வசனத்தை வெளிப்படுத்தின விசேஷம் ஒன்றாம் அதிகாரம் ஆறாவது வசனத்தை வாசிங்க வெளிப்படுத்தல் ஒன்று ஆறு நம்மிடத்தில் அன்பு கூர்ந்து தமது இரத்தத்தினாலே

 நம்முடைய பாவங்களா நம்மை கழுவி தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களும் ஆக்கினர் ஆசாரியர்களும் ஆக்கினர் போதும் ராஜாக்களும் ஆசாரியரும் ஆக்கினர் இந்த வெள்ளைப்போலம் என்பது ஆசாரியத்துவத்துக்கான அடையாளம் வெள்ளைப்போலம் என்பது சாட்சிக்கான அடையாளம் வெள்ளைப்போலம் என்பது அபிஷேகத்துக்கான அடையாளம் இன்னைக்கு ஆண்டவர் உங்களையும் உங்க வீட்டுக்குள்ள அப்படி ஒரு அபிஷேகத்தை வச்சிருக்கிறார் உங்க வீட்டுக்கு உங்களை வெறும் ராஜாவா வைக்கல நமக்கெல்லாம் எப்படி தெரியுமா இருக்கு ராஜாவா இருக்கணும்னு ரொம்ப ஆசை

 வீட்ல வீடு அரண்மனை மாதிரி இருக்கணும் அந்த வீட்ல நான் ராஜாவா இருக்கணும் சிலர் எல்லாம் சொல்லுவாங்க எங்க அப்பா எங்களை ராணி மாதிரி வச்சிருந்தார் அப்படிம்பாங்க அந்த வீட்டுக்கு அவங்க எப்படி இருந்திருக்காங்க ராணி மாதிரி இருந்திருக்காங்க அதுவே பிள்ளைகளை சொல்லும்போது சொல்லுவாங்க அப்பாக்கள் சொல்லுவாங்க தங்களுடைய பெண் பிள்ளைகளை கொஞ்சும்போது இந்த எங்க வீட்டுடைய ராணி இதுதான் எங்க வீட்டுடைய இளவரசு இதாம்பாங்க நம்ம வீட்டுக்கு நம்ம தான் ராஜா நம்ம வீட்டுக்கு நம்ம தான் ராணி நம்ம வீட்டுக்கு நம்ம தான் இளவரசர் நம்ம ஒன்னும் பெரிய நாட்டுக்கு ராஜாவாக

 போறதில்ல ஆனா இன்னொன்னு இருக்கு உங்க வீட்டுக்கு நீங்க தான் ஆசாரியன் கர்த்தர் உங்களை தான் ஆசாரியன் வச்சிருக்கிறார் பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டியது உங்களுடைய கடமை உங்கள் குடும்பத்துக்கு ஆசாரியத்துவத்துக்கு நீங்க தான் முக்கியமாக இருக்கணும் இன்னைக்கு உங்க குடும்பத்துக்குள்ள வெள்ளைப்போலத்தினுடைய வாசனை இருக்குதா வெள்ளைப்போலம்னா என்ன தெரியுமா வாசனை சாட்சி நீங்க யோவான் எழுதின சுவிசேஷம் 12 ஆம் அதிகாரத்தை நீங்க வாசிச்சு பாருங்க ரெண்டு மூணு வசனத்துல மரியாள் கொண்டு வந்து வாசிங்க அங்கே அவருக்கு ராவிருந்து பண்ணினார்கள் மார்த்தாள் பணிவிடை செய்தாள் ம் லாசருவும்

 அவருடனே கூட பந்தியிருந்தவர்களில் ஒருவனாய் இருந்தான் அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற கலங்கமில்லாத நலதம் என்னும் தைலத்தில் ஒரு ராத்தல் கொண்டுவந்து அதை இயேசுவின் பாதங்களில் பூசி தன் தலைமயிரால் அவருடைய பாதங்களை துடைத்தாள் அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமலத்தினால் நிறைந்தது அப்போ உங்க வீட்டுக்குள்ள வெள்ளைப்போலம் இருக்குமானால் உங்க வீடு முழுவதும் தைல வாசனையால் நிரம்பும் அபிஷேக தைலத்தினால் நிரம்பும் உங்க வீடு சாட்சியின் வாசனை நிரம்பும் உங்க வீட்டை பார்க்கிறவங்க கிறிஸ்து உங்க வீட்டுக்குள்ள இருக்கிறார் இந்த இந்த வீட்டை மாதிரி நான் ஆசீர்வாதமா

 இருக்கணும்னு நினைக்கணும் அதுதான் வெள்ளைப் போலத்தினுடைய தன்மை சில நேரங்களிலே வீட்டுக்குள்ள கசப்பான அனுபவம் வரும் சில பாடுகள் வரும் சில பிரச்சனைகள் வரும் வராமல் இருக்காது அப்படி வந்தாதான் குடும்பம் ஆனால் அவைகளுக்கு நடுவுல கர்த்தர் உங்களுக்கும் எனக்கும் ஒரு ஆசீர்வாதமான வாசனையான வாழ்க்கை வச்சிருக்கிறார் அடுத்தவங்க பார்க்கும்போது உங்களையும் என்னையும் சாட்சி சொல்லணும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவங்க இப்படித்தான் இருப்பாங்க பாருங்க அந்த குடும்பத்தை பாருங்க இயேசுவை ஏற்றுக்கொண்டாங்க இன்னைக்கு என்னவா மாறிட்டாங்க அவங்க இயேசு

 கிறிஸ்துவை நம்புறாங்க அவங்க குடும்பம் எப்படி ஆசீர்வாதமா இருக்குது அவங்க பிள்ளைகள் எப்படி இருக்குறாங்க பாருங்கன்னு நம்மள பார்த்து சாட்சி சொல்லணும் அதான் வெள்ளைப்போலத்தினுடைய தன்மை இன்னைக்கு நாம குடும்பத்தை பார்த்து சாட்சி சொல்ல முடியுதா பெரிய கொடுமை என்ன தெரியுமா இந்த நாள்ல சொல்றதுக்கு கொஞ்சம் வருத்தப்படுறேன் இங்க சென்னை ஹைகோர்ட்ல போனா டிவோர்ஸ் கேஸ்ல கிறிஸ்தவர்கள் கேசும் அதிகமா இருக்குது கிறிஸ்தவர்களும் அதிகமாக அங்க டிவோர்ஸ்ல இருக்கிறாங்க மத்த மதக்காரங்க டிவோர்ஸ்ல இருக்கும்போது நாம வாழ்ற வாழ்க்கையை பார்த்தாலே அவங்க

 தெரிஞ்சுக்க முடியும் பாருங்க கிறிஸ்தவர்களுக்குள்ள டைவோர்ஸ் இல்ல அவங்க எவ்வளவு ஒத்துமையா இருக்குறாங்கன்னு சொல்ல வேணாமா இன்னைக்கு கிறிஸ்தவ குடும்பங்களை பார்த்தா மத்த குடும்பங்களை விட மோசமான நிலைமைக்கு இருக்கு நம்மளை பார்க்கும் பொழுது அவர்களுக்கு தெரியணும் கிறிஸ்து இந்த வீட்டில் இருக்கிறார் அதனால இவங்க ஆசீர்வாதமா இருக்குறாங்க கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாங்க அதனால ஆசீர்வாதமா இருக்குறாங்க நம்மள சுத்தி நிறைய புறஜாதியார் இருக்கிறாங்க நம்மள சுத்தி சொந்தக்காரங்க நம்மள பார்த்துக்கிட்டே இருக்கிறாங்க அவங்க எல்லாருக்கும் நம்ம

தான் வெள்ளைப்போல வாசம் நம்மள அதுதான் அந்த வெள்ளைப்பழம் வாசனை இப்ப நீங்க சென்ட் அடிக்கிறீங்களே அந்த சென்ட்ல அந்த வெள்ளைப்பழம் கலந்து இருக்கும் எல்லா சென்ட்லயும் அதுதான் அதோட இன்கிரிடியன்ட்ஸ் அது உள்ள அந்த வெள்ளைப்பழம் கொஞ்சம் வைப்பாங்க அதனாலதான் உங்க சென்ட் வந்து ஸ்மெல்லா இருக்குது நல்ல வாசனையா இருக்குறதுக்கு அதான் காரணம் எவ்வளவு காசு காஸ்ட்லியான வெள்ளைப்போழம் வாங்குறீங்களோ அவ்வளவு காஸ்ட்லியா இருக்கும் உங்க சென்ட் அவ்வளவு ஸ்மெல் வரும் அந்த ஸ்மெல்லுக்கு காரணமே மிர்ரிங் சொல்லக்கூடியதான அந்த வெள்ளைப்போலம் தான் அப்போ அதோட அர்த்தம் என்ன இந்த

 வெள்ளைப்போலம் வாசனை வீசி அநேகரை உங்கள் பக்கம் திருப்பும் அதுதான் இயேசுகிட்ட கொண்டு வந்து விட்டாங்க இப்ப பாருங்க அதுக்கு முன்னாடி இருந்தவங்க கிட்ட இல்லாத ஒரு சாட்சி இயேசுகிட்ட இருக்கு இயேசு சொல்றாரு என்னில் குற்றம் உண்டு என்று உங்களில் சொல்ல முடியும் இயேசு சொல்றாரு நான் பரிசுத்தராய் இருக்கிறது போல நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் அதே மாதிரிதான் நம்ம குடும்பத்தை பார்க்கும்போது நம்ம குடும்பத்தை வெளியே இருக்கிறவங்க பார்க்கும்போது இந்த குடும்பத்தை மாதிரி வரணும் நாம பிள்ளைகளை வளர்க்கிற முறையை பார்க்கும்போது அவங்க சொல்லணும் இந்த பிள்ளைகள் மாதிரி

 வளர்க்கணும் நான் ஒரு காரியத்தை சொல்லிட்டு முடிக்கிறேன் கவனிங்க ஒரு இந்திய அரசாங்கத்துல ஒரு 50 வருஷத்துக்கு முன்னாடி இந்திய அரசாங்கத்துல மிக முக்கியமான போஸ்டிங் மிக்க முக்கியமான சீக்ரெட் போஸ்டிங் உண்மையா இருக்க வேண்டிய போஸ்டிங் எல்லாம் வந்துச்சுன்னா என்ன பண்ணுவாங்க தெரியுமா பெரும்பாலும் கிறிஸ்தவர்களை செலக்ட் பண்ணுவாங்களாம் ஒரு 50 வருஷத்துக்கு முன்னாடி என்ன காரணம் அப்படின்னு கேட்டீங்கன்னா அவங்க சொல்லுவாங்களாம் கிறிஸ்தவங்க என்ன செய்ய மாட்டாங்க தப்பு செய்ய மாட்டாங்க உண்மையா இருப்பாங்க நம்ம வீடுகளிலேயே சொல்லுவாங்க அந்த காலத்துல கிறிஸ்தவங்க போய் இப்படி

 எல்லாம் செய்றாங்கன்னு கேப்பாங்க யாராவது கிறிஸ்தவங்க தப்பு பண்ணிட்டா கேப்பாங்க கிறிஸ்தவங்க இப்படி செய்றாங்களேன்னு இப்ப அப்படி இல்ல இப்போ மொத்த வேலையும் கிறிஸ்தவன் தான் செய்றாங்கன்ற மாதிரி ஆயிப்போச்சு சாட்சியே கெட்டுப்போச்சு நம்ம வீட்ல ஒரு வாசனை இருக்கணும் வெள்ளைப்போல வாசனை அது என்னவா இருக்கணும் தெரியுமா கிறிஸ்துவின் வாசனை வீசும் வெறும் பண்டிகை நாள் அன்னைக்கு மட்டும் இல்ல ஏதோ ஒரு பங்க்ஷன் அன்னைக்கு மட்டும் இல்ல ஒவ்வொரு நாளும் உங்க ஏரியாவில் இருக்கிறவங்க இயேசுவை தெரிந்து கொள்வதற்கு நீங்க தான் வழி எப்படி தெரியுமா உங்க வாழ்க்கையை அவங்க

 பார்க்கணும் உங்க ஆசீர்வாதத்தை அவங்க பார்க்கணும் உங்க வீட்ல இருக்கிற சமாதானத்தை அவங்க பார்க்கணும் உங்க வீட்டுக்குள்ள இருக்கிற சந்தோஷத்தை அவங்க பார்க்கணும் பார்த்த பிறகு அந்த ஏரியால இருக்கிறவங்க சொல்லணும் இந்த இயேசு எனக்கும் வேணும் அவங்க பாருங்க எவ்வளவு சந்தோஷமா இருக்குறாங்க அப்படின்னு நம்மள பார்த்து தெரிஞ்சுக்கணும் என்ன சொல்றாங்க பைக்ல கணவனும் மனைவியும் போகும்போது ரெண்டும் எப்பா பாரு சண்டை போட்டுக்குது ஆனா போகும்போது ஒன்னா போற மாதிரி பைக்ல போகுது அப்படிங்கிறாங்க நம்மள பார்த்து இப்ப அப்படி ஆயிப்போச்சு அப்படி சொல்லக்கூடாது அவங்க ரெண்டு பேரையும்

 பாருங்க எப்பவும் அன்யோன்யமா இருக்குறாங்க அவங்ககிட்ட சண்டையே கிடையாது இப்படி சொல்லணும் சின்ன சின்ன சண்டைகள் வீட்ல வரும் அதை உடனே சால்வ் பண்ணிரனும் சாயங்காலத்துக்குள்ள ஆனா நம்மள பார்க்கும்போது ஒரு வெள்ளைப்போல வாசனை இதைத்தான் கொண்டு வந்து இயேசுகிட்ட வைக்கிறாங்க இதுவரைக்கும் இல்லாத சாட்சி இதுவரைக்கும் இல்லாத ஒரு மகிமை இதுவரைக்கும் இல்லாத ஒரு அபிஷேகம் இயேசு கிறிஸ்து கொண்டு வருகிறார் பூமிக்குள்ள அதனாலதான் இந்த மூன்று காரியங்களை கொண்டு வந்து அவருடைய பாதத்தில் வைக்கிறாங்க ஒன்று பொன் இன்னொன்று தூபவ வர்க்கம் இன்னொன்று வெள்ளை போலம் அதனுடைய அர்த்தம்

 என்னன்னா ஆளுகை மகிமை இரண்டாவது ஜெபம் மூன்றாவது சாட்சி இந்த மூன்று காரியங்களையும் நீங்கள் கொண்டு வரும் பொழுது உங்கள் வீடு கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தினால் நிரம்பும் ஆசீர்வாதத்தினால் நிரம்பும் கிறிஸ்து உங்களைக் கொண்டு பெரிய காரியங்களை செய்ய முடியும் நம்ம ஜெபம் பண்ணலாமா நாம எல்லாரும் நாமெல்லாம் ஜெபிக்கலாம் எந்திரிப்போமா இருக்கிற இடத்துல இந்த வருடம் முழுவதும் கர்த்தர் நம்மை நடத்தி இருக்கிறார் இந்த 12 மாதம் கர்த்தர் நடத்திக்கொண்டு வந்திருக்கிறார் இன்னும் ஒரு ஏழு நாளில் ஏழாவது நாளிலே நாம் புது வருடத்துக்குள் நுழையப் போகிறோம் இந்த

 வருடம் முழுவதும் கர்த்தர் நடத்தினார் இந்த வருஷத்துல உங்க வீட்டுக்குள்ள இயேசு இருந்தாரா அவர் வாசப்படியில் நின்னு கதவை தட்டினாரா இல்ல உள்ளே வந்து போஜனம் பந்தி இருந்தாரா இயேசு வெளியே நின்னாரா உள்ள வந்தாரா அதுதான் ரொம்ப முக்கியம் யோசிச்சு பாருங்க உங்க வீட்டுக்குள்ள என்ன வாசனை வீசுச்சு வெள்ளைப்போலத்தின் வாசனை வீசுச்சா இல்ல செத்துப்போன ஈ இருக்கக்கூடியதான அந்த நாறிப்போன தைலத்தின் வாசனை வீசுச்சா தைல வாசனையும் வந்துச்சு அப்பப்ப செத்துப்போன ஈயின் வாசனையும் வந்துச்சு [இசை] இன்னைக்கு இன்னைக்கு நிறைய பேர் வீட்டுக்குள்ள வெள்ளை போல வாசனை இல்ல

 பாக்குறதுக்கு தான் கிறிஸ்தவ வீடு ஆனால் புறஜாதியாரை விட மோசமான கண்டிஷன் கிறிஸ்தவங்கன்றதுக்கான அடையாளம் கொஞ்சம் கூட இல்லை பைபிள்ல உள்ள சாட்சியின் வாழ்க்கை கொஞ்சம் கூட இல்லை ஆண்டவர் பார்க்கிறார் பண்டிகை கொண்டாடுவதெல்லாம் இரண்டாவது மல்கியா புஸ்தகத்தில் சொல்றாரு நான் சொல்ற வார்த்தையை நீங்க கேட்கல பண்டிகை மட்டும் கொண்டாடுறீங்க உங்க பண்டிகையின் சாணியை எடுத்து உங்கள் முகத்தில் அடிப்பேன் அப்படிங்கிறார் ஆண்டவர் பண்டிகை கொண்டாட வேணாம்னு சொல்லல ஆனா என்ன சொல்றார் தெரியுமா நான் சொல்றதை முதல்ல செய் அப்புறம்தான் மிச்சம் இதெல்லாம் இன்னைக்கு இருக்குதா வீட்ல

 இயேசுவின் ஆளுகை இருக்கா ராஜ்ஜியம் இருக்கா வீட்ல சாட்சி இருக்கா மகிமை இருக்குதா தேவ பிரசன்னம் இருக்குதா இல்ல கர்த்தருக்கு விரோதமான சத்தம் கேட்டுக்கிட்டே இருக்குதா ஒரு தீர்மானம் எடுங்க இதெல்லாம் இந்த வருஷத்தோட போட்டோம் வருகிற வருஷம் எங்க வீட்டுக்கு கிறிஸ்து இருக்கிற வருஷமாக வரட்டும் வெளியே நிற்கிற கிறிஸ்து என் வீட்டுக்குள்ள வரட்டும் வாசப்படியில் நின்று கதவை தட்டுகிற கிறிஸ்து என் வீட்டுக்குள்ளே நுழையட்டும் எங்களோடு கூட போஜன பந்தி இருக்கட்டும் வெறும் நாங்கள் பண்டிகை கால கிறிஸ்தவர்களாய் இராதபடி சாட்சியுள்ள கிறிஸ்தவர்களாக அநேகருக்கு முன்பாக

 நிற்கிறவர்களாக அநேகரை நீதிக்கு உட்படுத்துகிறவர்களாக நாங்கள் மாறனும் ஒப்புக்கொடுப்போமா இன்னைக்கு ஒரு தீர்மானம் ஒரே ஒரு தீர்மானம் வருகிற ஒரு நாட்களிலிருந்து நாங்க தினந்தோறும் ஃபேமிலி பிரேயர் பண்ணுவோம் குடும்ப ஜெபம் பண்ணுவோம் ஆண்டவருக்கு நாங்கள் நேரம் கொடுக்கிறோம் எங்க வீட்டுக்குள்ள கர்த்தர் எங்களோடு கூட உலாவுவதற்கு நாங்கள் கதவை திறக்கப் போகிறோம் அப்படி ஒரு தீர்மானத்தோடு கூட நம்ம இந்த ஜெபத்தை முடிச்சா இந்த நாள் நமக்கு பிரயோஜனமான நாளாக இருக்கும் வெறும் களியாட்டத்துக்கான நாளாய் இது இருக்கக்கூடாது ஒப்புக்கொடுப்போமா தேவ

 சமூகத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்க விரும்புறவங்க கண்களை மூடி கரங்களை தேவனுக்கு நேராக உயர்த்தி ஆண்டவரே வருகிற வருஷம் நீர் எங்கள் வீட்டுக்குள் இருக்கிற வருஷமாக வரணும் எங்க வீட்டுக்குள் உலாவுகிற வருஷமாக வரணும் நீர் ஆளுகை செய்கிற வீடா என் வீடு மாறனும் என் வீட்டை கடன் ஆளுகை செய்யக்கூடாது என் வீட்டை வியாதி ஆளுகை செய்யக்கூடாது என் வீட்டை சண்டை ஆளுகை செய்யக்கூடாது என் வீட்டை மனுஷன் ஆளுகை செய்யக்கூடாது கிறிஸ்து ஆளுகை செய்கிற வீடாய் என் வீடு மாறனும் சர்வ வல்லமையுள்ள எங்கள் தகப்பனே இந்த நாளுக்காய் உமக்கு நன்றி கிருபையுள்ள

 கரத்தில் தாழ்த்துகிறோம் காலை வேளையிலே எங்கள் மத்தியிலே உம்முடைய வார்த்தையை அனுப்பின தயவுக்காய் ஸ்தோத்திரம் நாங்கள் வெறும் கேட்கிறவர்களாய் மாத்திரம் அல்ல ஆண்டவரே அதன்படி செய்கிறவர்களாய் மாற்றும் எப்படியாகிலும் வருகிற வருஷம் எங்களுக்கு கிறிஸ்துவோடு கூட நடக்கிற வருஷமாய் மாறட்டும் கிறிஸ்து ஆளுகை செய்கிற வருஷமாய் மாறட்டும் வந்திருக்கிற ஒவ்வொருத்தரையும் ஆசீர்வதிங்கப்பா அவங்க குடும்பங்களில் தேவனாகிய கர்த்தர் வைத்த ஆசீர்வாதத்தை சுதந்திரித்துக் கொள்ள கிருபை பாராட்டும் மகிமையுள்ள கரத்தில் எங்களை தாழ்த்துகிறோம் எங்கள் ஆண்டவர்

 இயேசுவின் நாமத்தில் பிதாவே 


Post a Comment

Previous Post Next Post